இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மீது மீண்டும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அமைச்சராக இருந்த பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டதோடு, குறித்த வழக்கு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்து, கடந்த செவ்வாய்க்கிழமை (03) அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2014 மே 21ஆம் திகதி, பிரதிவாதி பியங்கரா ஜயரத்ன சிவில் விமான அமைச்சராக பணியாற்றியபோது, கம்பத கேட்டர்ஸ் எனும் நிறுவனத்திற்கு ரூ. 330,000 பணத்தை செலுத்துமாறு, ஶ்ரீ லங்கன் கேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியை பணித்தமை உள்ளிட்ட இரு பாரிய குற்றங்கள் தொடர்பில் இலஞ்சம் ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (02) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் எழுத்து மூல அனுமதியின்றி பதிவு செய்யப்பட்டுள்ளதால், மீள வழக்கை பதிவு செய்தல் அடிப்படையில் அவ்வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
No comments:
Post a Comment