க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்ற எந்தவொரு பரீட்சை நிலையத்திலும் எந்தவொரு மாணவ, மாணவியருக்கும் எவ்விதமான அசௌகரியமோ, பாதிப்போ ஏற்படவில்லையென கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும் தெரிவித்தார்.
அவ்வாறான அசெகளரியங்கள் ஏற்பட்டதாக தெரிவித்து சிலர் அரசியல் இலாபம் தேட முனைகின்றனர் என்றும் நாட்டின் புத்திஜீவிகளான மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று இரண்டாவது நாளாகவும் பரீட்சைகள் நடைபெற்றன. சில பிரதேசங்களில் காலநிலை காரணமாக சில அசௌகரியங்கள் இடம்பெற்றபோதும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சில இணையத்தளங்கள் கெக்கிராவ கல்வி வலயத்தில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து சென்றதனால் பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை என செய்தி வெளியிட்டிருந்தன.
அது தொடர்பில் நான் உடனடியாகவே பரீட்சை ஆணையாளருடன் கலந்துரையாடி அது தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை விடுத்தேன். அவர் அதனை ஆராய்ந்து அதுபோன்ற எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிணங்க நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என எந்த மாணவ, மாணவியருக்கும் எவ்வித அசௌரியகங்களும் இடம்பெறவில்லை என உறுதியாக கூற முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment