கா‌‌ஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

கா‌‌ஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு

கா‌‌ஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை கூட்ட சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்கான், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ‌ஷா முகமது குரே‌ஷியிடம் நேரில் தெரிவித்தார்.

அவர் ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தபோது இச்சந்திப்பு நடந்தது. 

அப்போது, கா‌‌ஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றியும் இளவரசரிடம் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் எடுத்துரைத்தார். மாநாடு நடத்தும் தகவலை அவரிடம் இளவரசர் தெரிவித்தார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, 57 முஸ்லிம் நாடுகளை கொண்டது ஆகும்.

No comments:

Post a Comment