கோட்டபாயவை முஸ்லீம், தமிழ் அரசியல் தலைவர்கள் பிசாசாக மக்கள் மத்தியில் காட்டி எதை சாதித்தார்கள் - பெரமுன கட்சியின் கல்குடா முஸ்லீம் பிராந்திய பேச்சாளர் ஏ.சி.பௌசுல் அமீன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

கோட்டபாயவை முஸ்லீம், தமிழ் அரசியல் தலைவர்கள் பிசாசாக மக்கள் மத்தியில் காட்டி எதை சாதித்தார்கள் - பெரமுன கட்சியின் கல்குடா முஸ்லீம் பிராந்திய பேச்சாளர் ஏ.சி.பௌசுல் அமீன்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
முஸ்லீம் அமைச்சர்கள் இல்லாமல் போனதற்கு நாம் அரசாங்கத்தை குறைகூற முடியுமா யானை தனது தலையிலே மண்னை அள்ளி வைத்தது போல் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் அவர்களது வசதிகளுக்காக நம்மை ஏமாற்றினார்கள் என்பதுதான் உண்மை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா முஸ்லீம் பிராந்திய பேச்சாளர் ஏ.சி.பௌசுல் அமீன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா முஸ்லீம் பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் வட்டாரங்கள் தோரும் அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் இடம் பெற்று வருகின்றது. 

அதன் அடிப்படையில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்திற்கான அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் கூட்டம் இன்று இரவு இடம் பெற்றது அதன் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் முஸ்லீம் அரசியல் தலைவர்களை நம்பிய வாக்காளர்களை அவர்களின் வசதி வாய்ப்புக்காக ஏலம் விட்டார்கள் என்றே நான் உறுதியாக சொல்கிறேன் அவர்களுக்கு எமது பிரச்சினைகள் பெரிதல்ல அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஆடம்ப வாழ்க்கைக்கு தேவையான வருமானம் மாத்திரம்தான்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை முஸ்லீம் அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் பிசாசாக அல்லது ஒரு பூதமாக தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்கள் மத்தியில் காட்டி எதை சாதித்தார்கள்.

சிறுபான்மை மக்களை சஜீதை ஆதரிக்க வைத்து இந்த அரசாங்கத்திற்கு முன் எந்தவிதமான ஒரு சலுகையையும் எதிர்பார்த்து அலுத்தம் கொடுத்து கேட்க முடியாத ஒரு கையாலாகாத தருனத்திலே எங்களை எமது அரசியல் தலைவர்கள் ஆக்கியுள்ளனர். 
இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு அமைக்கப்பட்ட ஆட்சிகளில் எல்லாம் முஸ்லீம்கள் அமைச்சர்களாக இருந்த வரலாரே இருந்துள்ளது இந்த அரசாங்கத்தில் மாத்திரம்தான் ஒரு பிரதி அமைச்சர் ஏனும் இல்லாமல் ஆட்சி நடைபெருகின்றது இதற்கு வழி அமைத்தவர்கள் நாங்கள் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள்தான்.

கடந்த அரசாங்கத்திலே அமைச்சராக இருந்த மனோ கணேசன் மலையக மக்களுக்கு ஐந்து பிரதேச செயலகங்களை புதிதாக எடுத்துக் கொள்ள முடியும் என்றால் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் எமது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகமும், ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவு விடயங்களும் ஏன் நிறைவேற்றப்படவில்லை இதற்கு நம்மை காலம் காலமாக ஏமாற்றிய முஸ்லீம் அரசியல்வாதிகள்தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஓட்டமாவடி 03ம் வட்டார தலைவர் எம்.பி.இஸ்ஸத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்குடா முஸ்லீம் பிராந்திய பொறுப்பாளர் ஏ.எம்.முஸ்தபா, கட்சியின் மீறாவோடை பிரேதேச செயற்பாட்டாளர் ஏ.ஜி.றபீக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment