மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 239 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 239 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். 

அவர்களுக்கான நிவாரணப் பணியினை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. 

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் நாவலடி, திருச்சந்தூர், கல்லடி முகத்துவாரம் ஆகிய கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு அக்கிராமங்களில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற வறுமை நிலையிலுள்ள 239 குடும்பங்களுக்கு புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவர்களும், டான் நியூஸ் குழுவினர் மற்றும் வேட்டையன் திரைப்படக் குழுவினர் இணைந்து அவர்களின் நிதி அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நேற்று (30) நாவலடி கிராம சேவகர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், திரு.சில்வஸ்டர், டான் நியூஸ் குழுவினர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment