படகு கவிழ்ந்து தாவியதில் என்ஜினில் சிக்கி மரணம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2019

படகு கவிழ்ந்து தாவியதில் என்ஜினில் சிக்கி மரணம்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை சல்லி-சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான டி. அகிலராஜ் (29 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-சாம்பல்தீவு பகுதியில் இருந்து நேற்றிரவு மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று இன்று காலை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கடல் கொந்தளிப்பு அதிகளவில் காணப்பட்டதால் படகு கவிழ்ந்ததையடுத்து மற்றைய படகுக்கு பாய்ந்த போது அவர் கீழே வீழ்ந்ததில் படகில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜின் வெட்டியதால் இவ்வனர்த்தம் இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment