காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (28.11.2019) நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதி தவிசாளர் எம்.ஐ..எம்.ஜெஸீம் உட்பட நகர சபையின் அனைத்து உறுப்பினர்களும், நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் மற்றும் கணக்காளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 2020ம் ஆண்டுக்காக காத்தான்குடி நகர சபையின் வரவு செலவுத்திட்டம் (பட்ஜட்) சபையில் தவிசாளரினால் முன் வைக்கப்பட்டு தவிசாளர் பட்ஜட் தொடர்பில் விளக்கமளித்தார்.
இதனையடுத்து காத்தான்குடி நகர சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் (பட்ஜட்) ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதுடன் சபை உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு வழங்கினர்.
காத்தான்குடி நகர சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்கள் நலன் சார்ந்தது என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
நேற்றைய காத்தான்குடி நகர சபையின் அமர்வின் போது டெங்கு ஒழிப்பு மற்றும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்யும் நடவடிக்கை பெரிய தோனக்கால்வாய், சின்ன தோனாக் கால்வாய் துப்பரவு செய்யப்பட்டது தொடர்லும் தொற்றா நோய் தொடர்பில் கவனம் செலுத்துதல், சட்ட விரோத கட்டுமானங்களை கட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் நகர சபையினால் இலவச பாலர்hடசாலையொன்றை ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நேற்றைய காத்தான்குடி நகர சபையின் அமர்வின் போது சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment