தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து விளம்பரங்களையும் அகற்றுமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து விளம்பரங்களையும் அகற்றுமாறு அறிவுறுத்தல்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து விளம்பரங்களையும் எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னர் அகற்றுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் போதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

கட்அவுட், போஸ்டர்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத போஸ்டர், கட்அவுட், அலங்காரங்கள், பேனர்கள் அனைத்தும் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் காலப்பகுதி நிறைவுறும்போது பொலிஸாரால் அகற்றப்படும். 

வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் தொடர்பில் அறியப்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment