இன்று திருமண பந்தத்தில் இணைந்தார் யோஷித ராஜபக்‌ஷ - நேற்று லெப்டினனாக ஜனாதிபதியினால் பதவி உயர்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

இன்று திருமண பந்தத்தில் இணைந்தார் யோஷித ராஜபக்‌ஷ - நேற்று லெப்டினனாக ஜனாதிபதியினால் பதவி உயர்வு

முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இன்று (03) காலியிலுள்ள ஹோட்டலொன்றில் இவரது திருமண வைபவம் நடைபெற்றது.

நிதிஷா ஜயசேகரவுடன் திருமண பந்தத்தில் இணைந்த யோஷித ராஜபக்‌ஷ நேற்றையதினம் (02) கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார்.

சேவையிலிருந்து நீக்கப்பட்ட யோஷித ராஜபக்‌ஷவை 2016 பெப்ரவரி 28 இலிருந்து கடற்படை லெப்டினன் ஆக மீண்டும் சேவையில் இணைப்பதற்கான உத்தரவில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வா அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment