TNT வெடிமருந்துடன் 61 வயது நபர் கைது - முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்காக கொண்டு வந்ததாக தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

TNT வெடிமருந்துடன் 61 வயது நபர் கைது - முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்காக கொண்டு வந்ததாக தெரிவிப்பு

திருகோணமலை, நகர் பகுதியில் ரி.என்.ரி. (TNT) வெடிபொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வயோதிபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வைத்திருப்பதாக துறைமுக பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து வயோதிபரின் வீட்டை சோதனையிட்ட போது TNT வெடி பொருளை கண்டெடுத்துள்ளதாகவும் இந்த வெடி பொருட்களை முல்லைத்தீவிலிருந்து மீன் பிடி நடவடிக்கைகளுக்காக கொண்டு வந்ததாகவும் சந்தேகநபரான வயோதிபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, அருணகிரி வீதியைச் சேர்ந்த 61 வயதான நபர் என தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகநபரை நாளையதினம் வெள்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment