எஸ்.எம்.எம்.முர்ஸித்
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தினை முன்னிட்டு “பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு” “முதியோர்களான உங்களுக்கு சம உரிமை வழங்கும் நாளைய தினத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இவ்வருடம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வும் “நங்கூரம்” சஞ்சிகையின் 12வது வெளியீடும் கல்குடா கும்புறுமூலை மாற்றுத்திறனாளிகள் பயிற்சி நிலையத்தில் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.ஏ.சி.றமீஷா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட குழந்தை உரிமை ஊக்குவிக்கும் அதிகாரி வி.குகதாசன், கோறளைப்பற்று மத்தி சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், வாழைச்சேனை சமுக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வும் “நங்கூரம்” சஞ்சிகையின் முதல் பிரதியினை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.ஏ.சி.றமீஷாவினால் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்திற்கு வழங்கப்பட்டதுடன், உதவி அரசாங்க அதிபரினால் ஏனையோருக்கு சஞ்சிகை பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தினை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தினை முன்னிட்டு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment