ஆண் கட்டழகன் போட்டியில் செம்மண்ணோடை விளையாட்டுக் கழகம் மாகாண, தேசி மட்டத்திற்கு தெரிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

ஆண் கட்டழகன் போட்டியில் செம்மண்ணோடை விளையாட்டுக் கழகம் மாகாண, தேசி மட்டத்திற்கு தெரிவு

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை சுஹாரி சோட்டோ கான் கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகம் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான ஆண் கட்டழகன் போட்டியில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு கழக தலைவர் ஏ.ஆர்.நவாஸ் தெரிவித்தார்.

இதில் ஏ.ஜி.எம். அஸ்மிர் - (50 - 55 கிலோ) இடைப்பிரிவில் முதலாம் இடத்தினையும், எம்.எல்.எம். சப்றாஸ் (55 - 60 கிலோ) இடைப்பிரிவில், இரண்டாம் இடத்தினையும், ஏ.எல்.எம்.றியாஸ் (50 - 55 கிலோ) இரண்டாம் இடங்களையும் பெற்றுக்கொண்டு கழகம் சார்பாக மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

அத்தோடு மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற கராத்தே சம்பியன் 2019ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டியில் மாணவன் எச்.எம்.முப்லிஹீன், என்.எம். இஸ்ஸத், எம். சறௌத்ஸகி ஆகிய மூன்று மாணவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அண்மையில் திருகோணமலை மெகேஸியர் உல்லக அரங்கில் நடைபெற்ற ஆண் கட்டழகன் போட்டியில் எம்.எல்.எம். சப்றாஸ் (55 - 60 கிலோ) இடைப்பிரிவில் முதலாம் இடத்தினையும், ஜி.எம்.அஸ்மிர் - (50 - 55 கிலோ) இடைப்பிரிவில் மூன்றாம் இடத்தினையும் பெற்று தேசியத்திற்கு தெரிவு செய்துள்ளனர் என விளையாட்டு கழக தலைவர் ஏ.ஆர்.நவாஸ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment