ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனை அல் முபாறக் ஜும்மா பள்ளிவாயலில் எஸ்.எப்.ஆர்.டி (SFRD) அமைப்பின் நிதியுதவியினால் அமைக்கப்பட்ட மேல்மாடி கட்டட திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது.
பள்ளிவாயல் செயலாளர் எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், எஸ்.எப்.ஆர்.டி (SFRD) அமைப்பின் சார்பாக மௌலவி எம்.இஸ்ஸத் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு பள்ளிவாயல் மேல்மாடிக் கட்டடத்தினை திறந்து வைத்தனர்.
இதன்போது நாட்டு மக்களின் நல்லாசி வேண்டி விசேட துவா பிரார்த்தனையும் இடம்பெற்றது.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment