ஏப்ரல் 21ஆம் திகதியின் பின்னர் இலங்கையின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் பொருளாதார மற்றும் உரிமைகள் ரீதியாக கடுமையான பின்னடைவை எதிர்கொண்டனர்.
குறிப்பாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் அன்றாட வியாபாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதிலும் களுவாஞ்சிக்குடியில் அங்காடி வியாபாரம் செய்யும் 40 இற்கும் அதிகமான சகோதரர்கள் தங்கள் வியாபாரத்தை இழந்து நடு வீதியில் நிர்க்கதியாக நின்றனர் அதில் ஒரு சகோதரர் சுகவீனம் காரணமாக மரணித்து விட்டார்.
மீண்டும் அச்சகோதரர்கள் களுவாஞ்சிக்குடியில் வியாபாரத்தை மேற்கொள்ளுமுகமாக,
அவ்வேளைகளில் சகோதரர் Mohamed Mubeen நாநாவின் ஆதரவுடன் TNA வுடன் பேசிப்பார்த்தேன் பலனில்லை.
பின்பு சகோதரர் ABDUR RAHMAN (NFGG) அவர்களுக்கு தொலைபேசியில் TNA வுடன் பேசுமாறு கேட்டுக்கொண்டேன் பலனில்லை.
அங்கே TNA வியாபாரம் செய்ய அனுமதித்தாலும் களுவாஞ்சிக்குடியில் உள்ள காடையர்கள் சிலர் அதற்குத் தடையாகயிருந்தனர்.
இது சம்மந்தமாக எமது முஸ்லிம் அமைச்சர்களோ அல்லது முஸ்லிம் எம்பிக்களோ இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முயற்சிக்கவில்லை.
அவ்வேளை JVP யின் ஹந்துன்நெத்திக்கு WhatsApp ஒலி மூலமாக முஸ்லிம் மக்களின் வியாபாரப் பிரச்சினை சம்மந்தமாக சில விடயங்களை எத்திவைத்த போதும் பலனில்லை.
கடந்த நகர சபைத் தேர்தலில் காத்தான்குடியில் JVP சார்பாக நான் களமிறங்கியும் பல சகோதரர்களையும் அதில் இணைத்து தேர்தலில் போட்டியிடவும் செய்தேன்.
எங்கள் சமூகம் சார்பாக பாராளுமன்றத்தில் பலவேளைகளில் ஒலித்தார்கள் என்ற நன்றிக்கடனுக்காகவே கடந்த தேர்தலில் JVP யுடன் இணைந்து போட்டியிட்டேன்.
ஆனால் தேர்தல் வேளைகளில் தொலைபேசியை ஒலித்தவுடன் பதிலளிக்கும் JVP யின் ஹந்துன்நெத்தி இன்றுவரை முஸ்லிம் வியாபாரிகளின் பிரச்சினைக்கு பதிலளிக்கவில்லை.
தேர்தல் காலங்களில் JVP க்கு கொலைகாரர்கள் என்றும் சீயாக்களின் ஆதரவாளர்கள் என்றும், சிவப்புச் சட்டைக்காரர்கள் என்றும் இரகசியமாக ஏசித்திரிந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் (NFGG) இன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் (JVP) இணைந்திருப்பது சந்தர்ப்பவாதத்தை பிரதிபலிக்கும் அரசியல்.
மேலும் இவ்விரு கட்சிகளும் இந்நாட்டில் உள்ள மக்களுக்கான தேவை கருதி எந்தச் சேவையும் செய்யாமல் உரிமை உரிமை என்று மாத்திரம் வாயால் வடை சுடும் அரசியலில் பலம் பெற்றவர்கள்.
இந்த இரு கட்சிகளும் தேர்தல் வந்தால் மாத்திரம் உரிமை என்றும் ஊழல் என்றும் கோசம் போடுவதில் வல்லவர்கள்.
மக்களின் நலனுக்காக களப்பணி ஆற்றுவது எப்படி என்று மார்க்க முரண்பாட்டுக்கு அப்பால் SLTJ மற்றும் CTJ போன்ற அரசியல் சார்பற்ற அமைப்புகளிடம் டியூசன் எடுக்க வேண்டும்.
NFGG யிடம் களப்பணி ஆற்றக் கூடிய இளைஞர்கள் பலர் இருந்தும் அங்கே உள்ள சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி மண்ணும் தெரியாத ஒரு சில அதி மேதாவிகள் தாங்கள் பெரியவர்கள் என்ற கர்வம் கொண்டு களப்பணி ஆற்றக் கூடியவர்களை மட்டம் தட்டுவதும் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம்.
சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன் அல்ஹம்துலில்லாஹ் இன்று சந்தர்ப்பம் கிடைத்தது எழுதுகிறேன்.
எம்மக்கள் எம் சமூகத்தின் நலனில் நாட்டமில்லாத எந்தக் கட்சியும் எமக்குத் தேவையில்லை.
ஒரு அரசியல் கட்சி என்பது அனைத்து சமூகத்தின் குரலாகவும் ஒலிக்க வேண்டும் இல்லாவிடில் அக்கட்சி என்பது எமது கால் தூசுக்குச் சமன்.
என் சமூகத்து மக்களின் நலனே எனது அரசியல் பயணம்.
மாறாக எந்த அரசியல் கட்சியும் எனது மதமும் அல்ல மார்க்கமுமல்ல.
ஜூனைட் முஹம்மது முஜீப்
காத்தான்குடி நகர சபை முன்னாள் வேட்பாளர்
மக்கள் விடுதலை முன்னணி (JVP)
No comments:
Post a Comment