ஒக்டோபர் 07 - 12 வரை ஆசிரியர் மீண்டும் பகிஷ்கரிப்பு - கல்வி பாதிப்புக்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

ஒக்டோபர் 07 - 12 வரை ஆசிரியர் மீண்டும் பகிஷ்கரிப்பு - கல்வி பாதிப்புக்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தொடர் வேலைநிறுத்தத்தில் களமிறங்கப்போவதாகவும் இதனால் மாணவர்களின் கல்விக்கு ஏற்படும் இழப்பை கல்வி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டுமென்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். 

கடந்த இரு தினங்களாக அதிபர்களும் ஆசிரியர்களும் மேற்கொண்ட சுகயீன விடுமுறைப் போராட்டம் வெற்றியளித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

செப்டம்பர் 26, 27 ஆகிய இரு நாட்களும் அதிபர்களும் ஆசிரியர்களும் சுசுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக கல்வியமைச்சருக்கு நாம் எழுத்துமூலம் அறிவித்திருந்தபோதும் அவர் அது தொடர்பில் எமக்கு எவ்வித பதிலையும் அனுப்பவில்லை. 

ஆகக்குறைந்தது கடிதம் கிடைத்தது என்பதைக்கூட தெரியப்படுத்தவில்லை. அதன் காரணமாகவே நாம் திட்டமிட்டதுபோல் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டோம் என்றும் அவர் கூறினார். 

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment