வவுனியா - கனகராயன்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் செல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம், பழைய கண்டி வீதி பகுதியிலுள்ள தனியார் வெற்று காணியொன்றிற்குள் இருந்தே நேற்று (02.09.2019) மாலை இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதியிலுள்ள ஒருவர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்கு சென்ற போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் செல்கள் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 15 மோட்டார் செல்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பவற்றை மீட்டுள்ளனர். அத்துடன் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பகுதியில் வெற்று மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.
அப்பகுதியில் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காகவும் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இரானுவத்தினரை அழைத்து குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவதற்காக வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்காக கனகராயன்குளம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர். அத்துடன் குறித்த பகுதியில் பச்சை நிற உரை பையினுள் மண்கள் நிரப்பி முகாம் அமைத்தமைக்குரிய தடயங்கள் காணப்படுகின்றமை.
No comments:
Post a Comment