காலம் காலமாக தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் இம்முறை தோட்டத் தொழிலாளர்கள் ஏமாறப் போவதில்லை ஆகவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் தோட்டத் தெரிலாளர்களுக்கு மாதச் சம்பளத்தினையும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு, காணியுரிமை, வீட்டுரிமை, தோட்டங்களை துண்டாடுவதை தவிர்த்தல் போன்ற விடயங்களுக்கு எழுத்து மூலம் எவர் நிறைவேற்ற முன்வருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதும் வேலை செய்யப்போவதாக அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக அருணலு மக்கள் மன்னணியின் விசேட கூட்டம் ஒன்று நேற்று மாலை ஹட்டன் நகர சபை மண்டபத்தில நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோட்டத் தெரிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததற்கமைய தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மலையக மக்கள் பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் எவரும் இன்றுவரை அந்த வாக்குறுதியினை நிறைவேற்றவில்லை.
பிரதமர் ஆயிம் ரூபா பெற்றுத் தருவதாக தெரிவித்தார். ஆனால் அவரும் அதனை செய்ய வில்லை காலம் காலமாக தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியிருக்கின்றார்களே தவிர எவரும் எதனையும் செய்யவில்லை. ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் தொடர்பாக ஜெனிவா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆகவே ஜனாதிபதித் வேட்பாளர்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் பெற்றுக் கொடுக்க முன் வந்தால் நாங்கள் ஜெனிவாவில் முன் வைத்துள்ள மனுவினை வாபஸ் வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதனை எழுத்து மூலம் தர வேண்டும் எமது கட்சிக்கு வழங்க வேண்டும்.
இம்முறை கணிசமான எண்ணிக்கையானோர் எம்முடன் உள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் பரந்துவிரிந்து இருக்கின்றனர். அவர்கள் அனைவரினதும் வாக்குகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் நாடு முழுவதும் ஜனாதிபதியின் வெற்றிக்காக செயப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment