மக்களின் மனதை வென்ற மெளலவி ஹாமித் குவியும் பாராட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2019

மக்களின் மனதை வென்ற மெளலவி ஹாமித் குவியும் பாராட்டு

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மௌலவி ஹாமித் லெப்பை அவர்கள் தனது சேவையின் ஊடாக தமது வட்டார மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தமது வட்டாரத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் வீதி அமைத்தல் வடிகால் அமைத்தல் என பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார் அது மாத்திரமல்லாமல் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பல்வேறு அபிவிருத்திகளை திட்டமிட்டு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்னுடைய தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்குடா மக்களின் மிக நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த குடிநீர் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. 

இவ்வேலைத் திட்டத்தினை கல்குடாவிற்கு கொண்டுவருவதற்கு அயராது உழைத்தவர்களில் ஹாமித் மெளலவியும் பிரதான நபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கமைவாக பல்வேறு பகுதிகளில் நீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மௌலவி ஹாமித் அவர்களின் முயற்சியின் பயனாக அரசாங்கத்தின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாகவும் அமைச்சர்களான பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா, ஹரீஸ் ஆகியோர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வீதிகள் உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்திகள் தனது வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்டமிடப்படாத கொங்ரீட் வீதி அமைக்கும் வேலைத்திட்டத்தினால் அரசாங்கத்தின் பணம் வீண் விரயம் செய்யப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் பல வீதிகள் சேதமாக்கப்பட்டுள்ளது ஒரு அபிவிருத்தியினால் மற்றுமொரு அபிவிருத்தி பாதிப்படைந்து வருகின்ற நிலையினை இங்கு அவதானிக்க முடிகிறது.

இந்நிலைமையை கருத்தில் கொண்ட மெளலவி ஹமீத் அவர்கள் தனது அயராத முயற்சியின் காரணமாக தமது வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முன்கூட்டியே நீர்வழங்கல் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் வேலைகளை ஆரம்பித்து வீதி செப்பனிடும் பணியினை பொதுமக்களின் விருப்பத்திற்கு அமைவாக மேற்கொண்டு வருகிறார்.
நேற்று ஓட்டமாவடி ஹுதா பள்ளிவாயல் வீதிக்கு ரன்மாவத்தை வேலைத்திட்டத்தின் ஊடாக காபட்யிடும் பணி வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட ஏற்பாடாகி இருந்த நிலையில் அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வேலைத் திட்டம் பிரதேச சபை உறுப்பினர் மௌலவி ஹாமித் அவர்களின் தலையீட்டின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

இவ்வீதி இப்பிரதேசத்தின் பிரதான வீதி ஆகும் இந்நிலையில் இவ்வீதிக்கு நீர் குழாய் பதிக்கும் வேலைகள் இருப்பதனால் இவ்வீதியினை தான்தோன்றித்தனமாக காபட் இட்டு செப்பனிட்டாள் மீண்டும் நீர் குழாய் பதிப்பதற்காக இவ்வீதி சேதம் ஆக்கப்படும் என்ற நிலைமையை கருத்தில் கொண்டு நீர் குழாய்யினை பதித்ததன் பின்னர் காபட் இடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியதன் பின்னர் அப்பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அவ் வீதிக்கு காபட் இடும் வேலைத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பிரதேச அபிவிருத்தி பாதுகாக்கப்பட்டது.

அவசர கதியில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததற்காக மௌலவி ஹாமித் அவர்களின் செயற்பாட்டினை அப்பிரதேச மக்கள் வரவேற்றதுடன் தமது வட்டாரத்தின் அபிவிருத்தியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவருக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment