ஒரு மாத காலமாக புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அகில இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.
மாவனல்லைச் சம்பவங்கள் மற்றும் ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
ஹஜ்ஜுல் அக்பர் சுமார் ஒரு மாத காலமாக தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டார். பின்னர் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாததன் காரணமாக நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
முஸ்லிம் அமைப்புகள் நிறுவனங்கள் பலவும் அவரது விடுதலைக்காக குரல் எழுப்பி வந்தன. கடந்த புதன்கிழமை முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவொன்று பதில் பொலிஸ் மா அதிபரை சந்தித்து அவரது விடுதலை குறித்து கலந்துரையாடியது. அப்போது விரைவில் சாதகமான முடிவு எட்டப்படுமென அவர் உறுதியளித்திருந்தார்.
இந்த அடிப்படையில்தான் அவர் நிரபராதி என அறிவித்து விடுதலை செய்யப்பட்டார். பாதுகாப்புத்தரப்பும், புலனாய்வுப் பிரிவும் எடுத்த இந்த முடிவு குறித்து இலங்கை முஸ்லிம் கவுன்சில் உட்பட முஸ்லிம் அமைப்புகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
எம்.ஏ.எம். நிலாம்

No comments:
Post a Comment