ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் {MNA} முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு சார்பில் காத்தான்குடி நகரசபையின் புதிய உறுப்பினர்களாக காத்தான்குடி முன்னால் நகர முதல்வர் மர்சூக் அஹமட்லெப்பை மற்றும் MIM.ஜஹானி ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தலைமையில் (07.09.2019 வெள்ளிக்கிழமை) அவரது இல்லத்தில் இடம்பெற்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே மேற்படி தெரிவு இடம் பெற்றது.
உள்ளுராட்ச்சி மன்றத் தேர்தலின் பிற்பாடு SLMCக்கு கிடைத்த 3 போனஸ் ஆசனத்திற்கமைய காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், ULNM. முபீன், பெண் உறுப்பினர் AL. உம்மு பஜ்ரியா ஆகியோர்கள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வேட்பாளர்களுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் [Recalling} மீள்சுழற்சி என்ற அடிப்படையில் புதிதாக மேற்படி இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய உறுப்பினர்கள் சகலருக்கும் இவ்வாறே சந்தர்ப்பம் வழங்கப்படும் என பொறியியலாளர் சிப்லி பாறுக் இதன் போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment