தனக்கு ஒரு கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற 17 வயது காத்தான்குடி மாணவன் அஹமட் அனீக் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 7, 2019

தனக்கு ஒரு கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற 17 வயது காத்தான்குடி மாணவன் அஹமட் அனீக்

தனக்கு ஒரு கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து (NPAC - National Para Athletics Championships - 2019) தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது எம்.எம்.அஹமட் அனீக் என்ற மாணவன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 5,6 ஆம் திகதிகளில் (நேற்று முன்தினமும், நேற்றும்) கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற NPAC -National Para Athletics Championships - 2019 தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல் போன்ற மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

காலம் சென்ற (மர்ஹூம்களான) முஹம்மட் மஸ்ஹூர் - சித்தி பாத்திமா தாதி உத்தியோகத்தர் (NURSE) தம்பதிகளின் புதல்வாரன இவர் கடந்த காலங்களில் உதைப் பந்து விளையாடும் போது ஏற்பட்ட உபாதை காரணமாக 2017 ஆம் ஆண்டு ஒரு காலில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு கால் ஒன்றை கழற்றி (இழந்து) செயற்கை கால் ஒன்றின் உதவியுடன் தற்போது இயங்கி வருகின்றார்.
அத்தோடு தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றுவதற்கு பிலேட் புட் - (BLADE FOOT) செயற்கை கால் இல்லாவிட்டால் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதோடு குறித்த செயற்கை கால் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு 13 இலட்சம் தொடக்கம் 15 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் அதற்கு தனக்கு வசதி கிடையாது எனவும் குறித்த செயற்கை கால் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் உதவி செய்யுமாறு இம் மாணவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரகாபொல தாருல் ஹஸனாத் அகடமியில் கல்விப் பொதுத் தராதர உயர் தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று வரும் இவர் அதே அகடமியில் (AAT) ஏ.ஏ.ரீ. கற்கை நெறியையும் தொடர்ந்து வருவதோடு (ROW BOAT) ரோபோட் இராணுவத்தின் விஷேட பயிற்சிப் பிரிவில் பயிற்சி பெற்று வருவதோடு ஊனமுற்றோருக்கான (REHAB LANKA SPORTS CLUB) றிஹப் லங்கா விளையாட்டுக் கழகத்திலும் அங்கத்தவராக செயற்பட்டு கல்வித் துறையிலும், விளையாட்டு துறையிலும் தனது சாதனைகளை நிலை நிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

No comments:

Post a Comment