நடைமுறை பொறிமுறைகள் மூலமே ஜனநாயகத்தை வலுப்படுத்தலாம் - சமூக ஊடகமானது கடவுளைப் போன்று ஆக்கும் அழிக்கும் வல்லமைக் கொண்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2019

நடைமுறை பொறிமுறைகள் மூலமே ஜனநாயகத்தை வலுப்படுத்தலாம் - சமூக ஊடகமானது கடவுளைப் போன்று ஆக்கும் அழிக்கும் வல்லமைக் கொண்டது

சட்டங்கள் மட்டும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில்லை. ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகள் ஆகியவற்றின் மூலமே ஜனநாயகத்தை வலுப்படுத்தலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலைதீவு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.

ஜனநாயக அம்சங்களின் சுதந்திரத்தை இலங்கை எவ்வாறு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தியது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மாலைதீவின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹம்மட் நசீட்டின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கு விஜயம் செய்த இலங்கை பிரதமருக்கு மாலைதீவு பாராளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அங்கு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக ஊடகமானது புராதன காலத்து கடவுளைப் போன்று ஆக்கும், அழிக்கும் வல்லமைக் கொண்டது. அது சுதந்திரத்தின் செய்திகளையும் பரப்பும் அதேநேரம் அழிக்கும் உணர்வுகளையும் தூண்டிவிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

சமூக ஊடகமானது சைபர் வெளிக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான இரண்டும் கெட்டான் நிலையில் அல்லாடுகிறது. ஆயிரம் ஹிட்லர்கள் நெருப்பு வைக்கும் நிலையை உருவாக்கும் பயங்கர நிலையை அதனால் ஏற்படுத்த முடியும்.

செய்திகளை ஜனநாயகத்துக்கு ஏற்றவாறு எழுதுவதும் அவ்வாறு எழுதும்போது ஏற்படக்கூடிய தீமைகள் தொடர்பான சட்டக் கடப்பாடுகளுக்கிடையில் சம நிலையை பேணுவது ஒரு சிக்கலான விடயம். உலக நாடுகள் இதனைச் சரியாக செய்ய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு கூறினார்.

முன்னைய ஆட்சியின் போது ஜனநாயகம் மோசமாக மீறப்பட்டதையடுத்தே 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டது. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அரசியலமைப்பு சபையில் நியமனம் பெறுவோர் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் சுதந்திரமாக செயற்பட முடியும்.

ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று மக்களுக்கு தகவல் பெறும் உரிமையாகும். இது 19 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் எமது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டத்தில் அடிப்படை உரிமையாக அமைந்துள்ளது.

இன்று வெஸ்ட் மினிஸ்ட்டர் பாராளுமன்ற முறைக்கு அருகில் நிறைவேற்று அதிகார முறை உள்ளது. எனினும் நாம் அதனை ஒழிக்கும் கடப்பாட்டில் இருக்கிறோம். ஏனெனில் அந்த அதிகாரத்தில் இருந்தவர்கள் அதனை துஷ்பிரயோகம செய்துள்ளனர். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment