சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை துணிவுடன் தீர்க்கக் கூடிய அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் கொட்டகலை சீ.எல்.எப். கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்னும் திகதிகள் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் அதற்கு முன்னர் நாம் அவசரபட தேவையில்லை. திகதி மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னரே இது குறித்து முடிவு எடுப்போம்.
நாங்கள் 32 அம்ச கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளோம். எல்லா கட்சிகளிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தபட்ட பின்னர் எங்களுடைய 32 அம்ச கோரிக்கைகளையும் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
அந்த கோரிக்கைகளை யார் ஏற்கின்றார்களோ அவர்களுக்கு நாம் ஆதரவினை வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)
No comments:
Post a Comment