ஊழல் கரைபடியாத என்மீது நிதி மோசடி செய்தவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2019

ஊழல் கரைபடியாத என்மீது நிதி மோசடி செய்தவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்

ஊழல் கரைபடியாத தன்மீது உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, “எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன். அப்படியான என்னை மத்திய கலாசார நிதியத்தில் நிதி மோசடி செய்திருக்கிறேன் என்று கூறுகிறார்கள். அவை அனைத்தும் நம் நாட்டின் விகாரை அமைப்புக்களில் உள்ளன.

ஊழல் கரைபடியாத சஜித் பிரேமதாச மீது இந்த அரசியல் வர்ணனை மூலம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். பின்னர் விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என மறுபுறம் அறைகூவல் விடுக்கிறார்கள்.

இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்கள் கோடிக்கணக்களில் கொள்ளையிட்டு தற்போது சுகபோக வாழ்வினை வாழ்ந்து வருகின்றனர்.

இதுபற்றி பௌத்த கோட்பாடுகளிலேயே கூறப்பட்டிருக்கிறது. மோசடியாகவும் மற்றவர்களின் உழைப்பில் சுயநலத்துடன் வாழ்பவர்களும் ஆரம்பத்தில் நன்றாக வாழ்வார்கள் ஆனால் பிற்காலத்தில் அந்த கடனை கழிக்க வேண்டும் என்பதுதான் நியதி.

எங்களின் மீது குற்றம் சுமத்துகின்ற நபர்கள் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை சூறையாடிவிட்டு தற்போது சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு சூறையாடிய நிதியில் கண்ணாடி வீடுகளை அமைத்துக்கொண்டு வாழ்பவர்கள், அதனுள் இருந்துகொண்டே கற்களை வீசியெறிகின்றார்கள்.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மட்டுமல்லாது மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் அவர்களுக்கு மாளிகைகள் இருக்கின்றன.

எந்த பயனும் இல்லாத இந்த மாளிகைகளை இல்லாதொழித்துவிட்டு மாணவர்களுக்கு தொழில்நுட்ப கூடங்களை அமைக்க வேண்டும்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திலோ டிசம்பர் மாதத்திலோ பொதுமக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்களாயின் எங்கள் அனைவருக்கும் அமைச்சர் குழுவினருக்கும் நாட்டின் பிரதானிகள் அனைவருக்கும் கடினமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இவ்வாறு கூறுவதால் எனக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்புகளும் இல்லாமல் போய்விடுமோ தெரியவில்லை. ஆனால் நான் சரியானவற்றையே செய்வேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment