மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2 வௌிநாட்டு நிறுவனங்கள் ஊடாக 5 கணக்காய்வுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் பின்னர் சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் அனைத்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பிரதான பரிந்துரையாகும்.
No comments:
Post a Comment