அ.ச.முகம்மது சதீக்
கல்குடா சர்வதேச முன்பள்ளியானது தனது 13வது தொகுதி மாணவர்களின் கண்காட்சியானது முன்பள்ளி வளாகத்தில் மூன்று கூடங்களான நடைபெற்றது.
இக்கண்காட்சி கூடங்களுக்கு தாமரை, மல்லிகை, ரோஸ் என பெயரிடடிருந்தனர. மாணவர் பெற்றோரின் பங்களிப்புகளை கற்றல் கற்பித்தலில் அதிகரிக்கச் செய்து அதனூடாக மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்தலை முக்கிய கருப்பொருளாக கொண்டு இக்கண்காட்சியை ஒழுங்கு அமைப்பு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியில் மிகவும் சிறப்பான விடயமாக சமூகத்துக்கும் மாணவர்களுக்கும் சென்றடையக்கூடிய நல்ல பழக்க வழக்கங்களுக்கான விழிப்புணர்வு விடயங்கள் ஒவ்வொரு கண்காட்சி கூடங்களில் காணப்பட்டதுடன் அதிலும் குறிப்பாக தற்காலத்தில் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதனால் போக்குவரத்து விதிகள், செய்கை முறைகள் மூலம் செய்து காட்டப்டடதுடன் டெங்கு தொடர்பான வீடியோக்கள், புகைத்தல் தொடர்பான காட்சிப்பலகைகளும் காணப்பட்டது.
மாணவர்கள் தங்களின் ஆக்கங்களை பெற்றாரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். இக்கல்குடா சர்வதேச முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் ஆக்கங்களை திறம்பட செய்வதற்கு 72 வகையான கழிவுப் பொருட்களை கொண்டு செய்வதற்கு வழிகாட்டிக்கின்றார்கள் என்பது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
பெற்றோர்களின் செலவுகளை குறைத்து வினைத்திறனாக ஆக்கங்களை செய்வதற்கு திசைப்படுத்தப்பட்டிருந்து. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கழிவுப் பொருட்களின் பெயர்ப்பட்டியல் பட்டியலிடப்பட்டு அதனூடாக செய்யக்கூடிய விடயங்களை பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து தேடலில் மூலமே இக்கைப்பணியை வடிவமைத்தோம் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது எதிர்காலத்தில் கழிவுகளை குறைத்து மீள் உற்பத்தி செயற்பாட்டை அதிகரிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சிறுவர்களின் கண்காட்சி கூடங்களை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனையின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.சி. கலீல், சட்டத்தரணி ஐ,ஏ. ரஸ்மின், வைத்தியர் அப்தாப் அலி ஆகியோர் பார்வையிட்டனர். மற்றும் இக்கல்குடா சர்வதேச முன்பள்ளியின் பணிப்பாளர்களான எம்.எல். கலீல் ஆசிரியர், எம்.எச்.எம். ஹக்கீம் ஆசிரியர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத் ஆகியோர் பிரச்சன்னமாகியிருந்தனர்.
கல்குடா பிரதேசத்தல் ஆங்கில மொழி மூலமான முன்பள்ளியின் தேவை உணரப்பட்ட போது முதன்முறையாக சிம் சமூக சேவைகள் அமைப்பானது கல்குடா தொகுதியில் ஆங்கில மொழி மூலமான முன்பள்ளியை ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment