கோட்டை - பொலன்னறுவைக்கு இடையில் புதிய நகர ரயில் சேவை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2019

கோட்டை - பொலன்னறுவைக்கு இடையில் புதிய நகர ரயில் சேவை

கொழும்பு - கோட்டை மற்றும் பொலன்னறுவைக்கு இடையில் புதிய நகர ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் நடுப்பகுதியில் புதிய நகர ரயில் சேவையை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ரயில் இணைப்புகளில் காணப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மருதானையிலிருந்து பெலியத்த வரையிலான புதிய ரயில் சேவை, இம்மாத நடுப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment