ரயில்வே போராட்டக்காரர்களுக்கு திங்கட்கிழமை வரை கெடு - பணிக்கு திரும்பாவிடின் கடும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2019

ரயில்வே போராட்டக்காரர்களுக்கு திங்கட்கிழமை வரை கெடு - பணிக்கு திரும்பாவிடின் கடும் நடவடிக்கை

ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

திங்கட்கிழமைக்கு முன்னர் ரயில்வே ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிடின் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார். 

ரயில்வே ஊழியர்கள் பல்வேறு அரசியல் சக்திகளின் தேவைகளுக்காக முன்னெடுத்துவரும் போராட்டத்தை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர் கூறினார். 

அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நடைபெற்றுவரும் அனைத்துப் பணிப்பகிஷ்கரிப்புகளும் தேர்தல் காலத்தை மையப்படுத்தியதுடன், தேர்தல்கள் காலமென்றால் வழமையாக இவ்வாறான போராட்டங்கள் நடைபெறும். இந்தப் பணிப்புறக்கணிப்புகள் அனைத்தும் வேண்டுமென்றே முன்னெடுக்கப்படுபவையாகும். மக்கள் இவற்றுக்கு ஏமாற்றமடையக் கூடாது. 

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ரயில்வே ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment