ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜா உரிமையை சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை. எனினும் கேட்டாபயவுக்கு சட்டபூர்வமான இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டதா? என்ற கேள்வி இந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. 
2003 ஜனவரி 31ஆம் திகதி அமெரிக்க பிரஜா உரிமை கிடைத்ததையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ அவரது இலங்கைப் பிரஜைக்கான தகுதியை இழந்தார். எனினும் 2005 நவம்பர் 21ஆம் திகதி அவர் இரட்டை பிரஜா உரிமை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. 
மேற்கூறிய எழுத்து மூலமான மனுவை சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

No comments:
Post a Comment