பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி ஊடக நிலையம் இன்று திறப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 29, 2019

பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி ஊடக நிலையம் இன்று திறப்பு

பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதி கருதி முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்ட ஊடக நிலையம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் திறந்து வைக்கப்படுகிறது.

இந்த நவீனமயப்படுத்தப்பட்ட ஊடக நிலையத்தில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி கலையரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு மேலதிகமாக ஊடகவியலாளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பாராளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் குழுக்களின் கூட்டங்களை அறிக்கையிடும் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகளும் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக பிரதானிகளும் பாராளுமன்ற ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment