இனவாத அமைப்புக்கள், நபர்கள் எல்லா பக்கமும் இருக்கின்றன, தமிழ் தேசிய கூட்டமைப்பு, கருணா, வியாழேந்திரன், பொதுபலசேனா, ராவண பலய, சிங்கள பலய, சம்பிக்க, விமல் வீரவன்ச, மனோ கணேசன், ஆசாத் சாலி, ஆஷு மார்சி, முஸ்லிம் காங்கிரஸ் இவர்கள்தான் இன்றுவரை இனங்காணப்பட்ட இனவாதிகள் என உலமாக் கட்சித் தலைவரும், முஸ்லிம் தேசிய ஐக்கிய முன்னணியின் இணைத்தலைவர்களில் ஒருவருமான மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இவர்கள் எல்லா தரப்பினருடனும் இருப்பர், இருக்கிறார்கள். ஆனாலும் எந்த இனவாதி தன் பக்கம் இருந்தாலும் எதிர் பக்கம் இருந்தாலும் அவர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவரே உண்மையான தலைவர். அத்தகைய ஒருவர் நாட்டில் காண முடியாமை கவலையானதுதான்
ஆனாலும் ஒப்பீட்டளவில் மஹிந்தவையும், ரணில், சஜித் ஐக்கிய தேசியக் கட்சி அணியையும் பார்க்கும் போது இனவாதிகளை ஓரளவு கட்டுப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்.
அவர் புலிகளை கட்டுப்படுத்தினார், ஜேவிபிக்கு இடம் கொடுக்கவில்லை, பொதுபல சேனாவின் ஆட்டத்துக்கு கொஞ்சம் இடம் தந்தாலும் அவர்களை தலையில் தூக்கி வைக்கவில்லை, இதேபோல்தான் ஏனையவர்களும்.
ஆனால் இந்த நாலரை வருடத்தில் தம் தரப்பு இனவாதிகளையும் எதிர்த்தரப்பு இனவாதிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் நாடு தழுவிய இனவாதத்துக்கு இடம் கொடுத்தது இந்த ரணில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு.
இவர்கள் அம்பாரை பள்ளியை உடைக்க இடமளித்தார்கள், கண்டி, திகன, காலி என தாக்க இடமளித்தார்கள். முஸ்லிம் திருமண சட்டத்தை ஒழிக்க அனுமதித்தனர், குர்ஆனின் மொழியை காட்சிப்படுத்த தடை விதித்தி இஸ்ரேலின் ஹீப்ரு மொழிக்கு அனுமதியளித்தனர், கல்முனையில் கோர தாண்டவம் ஆடினர்.
கல்முனையில் முஸ்லிம்களின் பலத்தை குறைக்க தமிழருக்கு கல்முனையை பிரிக்க அனுமதித்தனர், சாய்ந்தமருதுக்கு பொய் வாக்குறுதி கொடுத்து அம்மக்களுக்கு வெறியேற்றினர், ஹிஸ்புல்லாவின் கெம்பசை தடை செய்ய போராடினர், முஸ்லிம் அமைச்சர்களையும் ஆளுனர்களையும் இராஜினாமா செய்ய வைத்தனர், தமிழர்களின் கண்ணியா, நீராவடியில் தாண்டவமாட அனுமதித்தனர் என தெரிவித்துள்ள அவர் இவ்வாறு ஒரு முதுகெலும்பு இல்லாத ஆட்சி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment