நாடளாவிய ரீதியிலுள்ள 15 அரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் காலவரையறையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஒருங்கிணைத்துள்ளன. பல்கலைக்கழக தொழில்நுட்ப ஊழியர்களின் தொழிற்சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை தம்புள்ளையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 15 அரச பல்கலைக்கழகங்களில் உள்ள 25 தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
2016ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா ஒரு ஒழுங்கு முறையற்ற விதத்தில் வழங்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டுமுதல் இதனை முறைமைப்படுத்துமாறு நாம் துறைசார் அதிகாரிகளுக்கு வலியுறுத்தி வருகின்ற போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதேபோன்று பேராதனைப் பல்கலைக்கழகங்களிலுள்ள பெறுமதியான விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பீடங்களிலுள்ள சடலங்கள் அழுகும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை கல்விசார் ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
அழுகிய நிலையிலுள்ள சடலங்களுடன் தான் நாங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளோம் எனவும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment