மாலைதீவுக்கான சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) நாடு திரும்பியுள்ளார்.
2019 இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலிஹியின் (Ibrahim Mohamed Solih) அழைப்பின் பேரில் பிரதமர் மாலைதீவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு பாராளுமன்றத்திலும் நேற்று (03) உரையாற்றியிருந்தார்.
இவ்விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கிடையிலான வீசா வசதி, சமூக பாதுகாப்பு, தொழிற்பயிற்சி, இளைஞர் அபிவிருத்தி, உயர் கல்வி ஆகிய துறைகளில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment