திருக்கோவில், தம்பட்டைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் 08 வயதுச் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, குறித்த விபத்தில் முச்சக்கர வண்டிச் சாரதி காயமடைந்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற இவ்விபத்தில், தம்பிலுவில் - 01 வீசி வீதியைச் சேர்ந்த சிசிகுமார் சிவசஞ்சயன் (08) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக தனது தாயுடன் குறித்த சிறுவன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, நாய் வீதிக்கு குறுக்காக சென்ற வேளை, முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அங்கு சிறுவன் உயிரிழந்துள்ளதாக, உறவினர்கள் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
No comments:
Post a Comment