நாடளாவிய ரீதியில் 319 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர். ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தவிர 324 மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த மருந்துகள் எவையும் களஞ்சியங்களில் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார். தட்டுப்பாடுள்ள மருந்துகள் பற்றிய விபரங்களையும் அவர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்.
எனினும் முழுமையான மருந்துகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், இந்த மருந்துத் தட்டுப்பாடு சகல அரசாங்க வைத்தியசாலைகளையும் பாதிக்கும் என்றும் கூறினார்.
அதேநேரம், மத்திய மருந்து களஞ்சியத்தின் பணிப்பாளர் குறித்த பதவியை வகிப்பதற்குப் பொருத்தமானவர் இல்லையென பொதுச் சேவைகள் ஆணைக்குழு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது. எனினும் இதுவரை செயலாளர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment