ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது. கட்சிக்குள் உருவாகி இருக்கும் முறுகல் நிலையை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் தனியாக இன்று இரவு சந்திக்கவிருக்கின்றனர்.
இவர்களின் இன்றைய சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்போகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் கட்சி உயர்மட்டங்களுக்கிடையிலான சந்திப்பின்போது இருதரப்பினருக்குமிடையிலான பிரச்சினையை தீர்ப்பதற்கு இரு தலைவர்களும் தனித்துப் பேசி முடிவுக்கு வரவேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப்பேச இருதரப்பும் இணக்கம் தெரிவித்திருக்கின்றன.
சில ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பூசலை ஊதிப்பெருப்பித்துக் கொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் இடம் பெற்ற சந்திப்பின் போது ரணில் பிடிவாதமாக இருந்தார் என்ற விதத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment