தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத்தே மில்லது இப்ராஹிம் அல்லது JMI அமைப்பின் உறுப்பினர்கள் மூவர், 7 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய இவர்கள் மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபர்கள், முஹம்மட் ஸஹ்ரானுடன் நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளிலுள்ள முகாம்களில் பயிற்சி பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சந்தேகநபர்கள் நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டனர்.
அபூசஹீட் என அழைக்கப்படும் முஹம்மட் மன்சூர் செய்புல்லா ஹக், அபூஹிந் என அழைக்கப்படும் முஸ்தாக் அலி அம்ஹர் மற்றும் அப்துர்ராபி என அழைக்கப்படும் முஹம்மது தாஹிர் ஹிதயத்துல்லா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment