பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூபின் நடவடிக்கையால் வெளிமாவட்டத்தில் நியமனம் பெற்றவர்களுக்கு தீர்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 6, 2019

பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூபின் நடவடிக்கையால் வெளிமாவட்டத்தில் நியமனம் பெற்றவர்களுக்கு தீர்வு

திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுநர்களாக நியமனம் பெற்ற அனைவரையும் தங்களது சொந்த மாவட்டத்தில் கடமைகளை பொறுப்பேற்று பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். 

திருகோணமலையில் அண்மையில் நியமனம் பெற்ற 193 பட்டதாரி பயிலுநர்களில் பலர் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியில் நியமிக்கப்பட்டனர். இது விடயமாக பட்டதாரி பயிலுநர்கள் பிரதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனைக் கருத்திற் கொண்ட பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தேசிய கொள்கைகள் பொருளாதார, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வீ.சிவஞான சோதியை நேற்று (05) மாலை கொழும்பில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் வைத்து சந்தித்துப் பேசினார். 

திருகோணமலை மாவட்டத்துக்கு வெளியில் நியமனம் பெற்றவர்களை திருகோணமலையில் பணிக்கு அமர்த்துமாறும் கோரிக்கை விடுத்தார். 

இதையடுத்து உரிய அதிகாரிகளான மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு ஆளுநரின் செயலாளர், பிரதம செயலாளர் ஆகிய அதிகாரிகளுக்கு செயலாளர் கடிதம் மூலமாக அறிவித்தார். இதையடுத்து சகலரையும் சொந்த மாவட்டங்களில் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments:

Post a Comment