இலங்கை மின்சார சபையானது, மின் பாவனையாளர்களுக்கு முற்கொடுப்பனவு முறையிலான மின்மானிகளை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அண்மையில் கண்டி அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்ததாக, “இலங்கை மின்சார சபையானது, அதன் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், பாவனையாளர்களை முன்னிறுத்தி அதன் பணியை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நீண்ட காலமாக ஏகபோக நிர்வாகத்தில் காணப்பட்ட இலங்கை மின்சார சபையானது, தற்போது வாடிக்கையாளர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளது.
இதற்கமைய, புதிய மின்சார பட்டியல் நடைமுறைப்படுத்துதல், புதிய மின் இணைப்புகளை ஒரு வாரத்திற்குள் வழங்குதல், வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வினை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுக்க தற்போது முடிந்துள்ளது” என்றார்
தற்போது பயன்பாட்டிலுள்ள மின்மானிகளை மாற்றி, முற்கொடுப்பனவு ரீதியிலான மின்மானிகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
புதிய மின்மானிகளை பொருத்தும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது” என்றார்.
No comments:
Post a Comment