மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அவர் தனது இராஜினாமா கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment