பொதுஜன பெரமுன எவ்வாறான கூட்டணியை அமைத்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியாதென சு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாடுகளை எட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்துவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற தருணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இணக்கப்பாடுகளை எட்டும் முகமாக ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் விரைவில் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தக்கூடும்.
நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு இருதரப்பும் கூட்டணியொன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதாகும். தனித் தனியாக சென்று தேர்தலை வெற்றிக்கொள்ள முடியாது.
பொதுஜன பெரமுன எவ்வாறானக் கூட்டணியை அமைத்தாலும் சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியாது என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment