பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வல்லமையில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வைத் பொறப்போகின்றது - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வல்லமையில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வைத் பொறப்போகின்றது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையான அதிகாரங்களைக்கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய காலக்கெடு நிறைவு பெறுவதற்கு இன்னும் 20 தினங்களே உள்ளன. இந்நிலையில், இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் கடத்துமாயின், அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடுவதற்கு அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கம் தயாராகவுள்ளது என்று இச்சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் சூளுரைத்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே உள்ளது. இவ்வாறான நிலையில் எமது மக்களின் வாக்குப் பலத்தால் பாராளுமன்றம் சென்று தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உதவும் கரமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு வாக்களித்தவர்கள் பக்கம் நிற்கின்றதா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினுடைய அரசியல் நலனைப் பேணுகின்றதா? என்ற வினாவை எழுப்ப வேண்டியுள்ளது.

2018.02.01 அன்று கல்முனை, நற்பிட்டி முனையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிறைவு பெற்று ஓரிரு தினங்களுக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று கூறிய வாக்குறுதி காற்றில் பறக்கின்றது.

இந்நிலையில், எவ்வாறு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் இனியும் செல்ல முடியும். ஒருமித்த நாட்டுக்குள் சமஷ்டி அலகை பெற்றுத்தருவோமென்று, வாக்குறுதியளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அற்ப விடயமான பிரதேச செயலகமொன்றை தரமுயர்த்துவதற்குக்கூட வல்லமையின்றி காணப்படும்போது எவ்வாறு இவர்களால் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர முடியும் ? ஏமாறுகின்றவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்ற கோட்பாடு இனியும் கல்முனையில், அதுவும் அம்பாறை மாவட்டத்தில் எடுபடமாட்டாது.

எமது தொழிற்சங்கம் கடந்த 3 தசாப்த காலமாக தமிழ்த் தேசியத்தின் நலனுக்காக உழைக்கின்ற அரசியல் கட்சிகளின் வெற்றிக்காக அயராது உழைத்துள்ளது. ஆனால், அற்ப விடயமொன்றை நிறைவேற்ற முடியாத இவர்களின் பின்னால் எமது மக்கள் இனியும் செல்வார்களா என்று எமக்குள்ளே வினாக்களைத் தொடுக்க வேண்டியுள்ளது. எனவே, எமது மக்களின் நீன்ட காலக் கனவையும் நியாயமான கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தராத பட்சத்தில் எமது மக்கள் மாற்று அரசியல் வழி முறையைத் தேடவேண்டினால், தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment