ரிஷாட் பதியுதீனுக்கு அமைச்சுப் பதவி கொடுத்ததுபோல குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு அரசியல்வாதிதான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.
இது குறித்து நாம் முறைப்பாட்டை முன்வைத்தும் பொலிஸார் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தற்போது விசாரணைகள் அனைத்தையும் முடித்து, அமைச்சுப் பதவியையும் அவருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. அவருக்கு ஒரு சட்டமும் நாட்டிலுள்ள ஏனையவர்களுக்கு ஒரு சட்டமும் தான் பிரயோகிக்கப்படுகிறது.
இவர் குற்றவாளி இல்லாவிட்டால், குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறேன்.
கைப்பற்றப்பட்ட வாள்களை மீள அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அத்தோடு, குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சர்ச்சையில் ஐக்கிய தேசியக் கட்சியும் குழப்பத்துடன்தான் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணி அமைப்பது தொடர்பில் அவர்களுக்குள் சர்ச்சை எழுந்துள்ளது” என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment