ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரைத் தவிர வேறொருவரும் கலந்துகொள்ளவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் விடயங்கள் குறித்து இதன்போது முக்கியமாகப் பேசப்பட்டன என்று இரு தரப்பின் வட்டாரங்களிலிருந்தும் அறியமுடிந்தது.
No comments:
Post a Comment