ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எவரும் பொதுஜன பெரமுனவிற்கு சவால் விடுக்க கூடியவர்கள் அல்லவென நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கெஹலிய மேலும் கூறியுள்ளதாவது, “2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது. அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரை இலக்கு வைத்தே இந்த செயற்பாட்டை முன்னெடுத்தது.

அதாவது 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்கள், சிறிய ரக வாகனக் கொள்வனவு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. தற்போது உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த விடயங்களே மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த மாதம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக யாரை அறிவித்தாலும் அது எமது கட்சிக்கு சவாலாக அமையாது” என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment