முஸ்லிம் பெண்மனியின் காணியின் வேலியை சேதப்படுத்திய இனவாதிகள் - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2019

முஸ்லிம் பெண்மனியின் காணியின் வேலியை சேதப்படுத்திய இனவாதிகள்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாஞ்சோலை - பதுறியா நகர் கிராமத்தில் அமைந்துள்ள முஸ்தபா லெப்பை றகுமா பீவி என்பவருடைய காணியின் வேலிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மட்/ககு முறாவோடை சக்தி வித்தியாலய மைதானத்துக்கு அருகாமையிலுள்ள முஸ்தபா லெப்பை றகுமா பீவி என்பவருடைய காணி பாடசாலை காணி என்றும் மட்/ககு முறாவோடை சக்தி வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழுவும் அப்பாடசாலை அதிபரும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். 

அவ்வழக்கு தீர்ப்பு காணி உரிமையாளரான முஸ்தபா லெப்பை றகுமா பீவிக்குரியது என்று நீதிமன்றத்தால்ல் விளம்பல் செய்யப்பட்டது.

இது தொடர்பில் அக்காணி உரிமையாளரான றகுமா பீவி கருத்து தெரிவிக்கையில் எனக்கு சொந்தமான அக்காணியில் நானும், என்னுடைய பிள்ளைகளும் பிறந்தது முதல் வாழ்ந்து வந்ததாகவும், கடந்த யுத்த காலத்தில் குடிபெயர்ந்து பின்னர் சமாதான சூழ்நிலையில் திரும்ப மீள்குடியேறிதாகவும் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில் தாங்கள் அங்கு மாற்று இன தமிழ் சகோதரர்களில் ஒரு சிலர் தொடர்ச்சியாக குடியிருக்கும் போது அருவருக்தக்க பொருட்களான சிறுநீரை பைகளில் கட்டி எரிவதாகவும் மற்றும் வேலிகளை அடிக்கடி சேதப்படுத்துவதாகவும் கற்களால் எறிவதாகவும் குறிப்பிட்டார். 

நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்காக ஆண்கள் பள்ளிவாயலுக்கு சென்ற பின்னர் எமது வேலிகளை ஒரு சிலர் வந்து சேதப்படுத்தியதோடு, அச்சந்தர்ப்பத்தில் பயத்தின் காரணமாக நாங்கள் இவ்விடத்தை விட்டு சென்றுவிட்டோம் என்றும் குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளாகவும் குறிப்பிட்டார்.

ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக்

No comments:

Post a Comment