மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் இல்ல பிரதிநிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (29) காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடாத்திய பயங்கரவாதியின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் முறுகல் நிலையையடுத்து இது தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் இல்ல பிரதிநிதிகள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக் கலந்துரையாடலின் போது இன முறுகல்கள் ஏற்படாதவாறு சமாதானத்தை நிலை நாட்டுவது தொடர்பிலும் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வீதியால் பயணித்த முஸ்லிம்களை தாக்க முற்பட்ட விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் மட்டு. ஆயர் இல்லத்தில் நடைபெற உள்ள சந்திப்பில் விரிவாக ஆராய்வது எனவும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய காத்தான்குடி நிருபர்
No comments:
Post a Comment