இஸ்லாம் பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

இஸ்லாம் பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கோரிக்கை

நாடளாவிய ரீதியில் காணப்படும் இஸ்லாம் பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் நாஸிர் கனி கோரிக்கை விடுத்துள்ளார். 

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் 424 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கணிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2008ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு நேர்முகப் பரீட்சையும் இடம்பெற்றிருந்தது. இதனடிப்படையில் 148 பேருக்கு மாத்திரமே மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. மிகுதி 276 வெற்றிடங்கள் நிரப்பப்படாது காணப்படுகின்றது. 

இஸ்லாம் சமயப் பாட வெற்றிடம் காணப்படும் சகல பாடசாலை வெற்றிடங்களையும் மௌலவி ஆசிரியர் நியமனத்தின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்றல்கேம்ப் குறூப் நிருபர்

No comments:

Post a Comment