இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவால் செம்மண்ணோடை தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் நிதி - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2019

இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவால் செம்மண்ணோடை தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் நிதி

சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக்கைத் தொழில் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானாவினால் கல்குடா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக கம்பெரலிய, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம், மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி என்பவற்றின் ஊடாக சுமார் 350 இலட்சம் ரூபாய் நிதி 2019ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன ,

அந்த வகையில் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் செம்மண்ணோடை தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ. கபூரின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் முஸ்தபா ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான அன்வர், ஹாமிட் மௌலவி, அஸீசுல் றஹீம், பதுர்தீன், அன்வர் ஆசிரியர் இம்தியாஸ் கட்சியின் கல்குடா இணைப்பாளர் அன்வர் நௌசாத் உட்பட முக்கியஸ்த்தர்கள், அமைச்சரின் இணைப்பாளர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர் .
இதன்போது குறித்த பள்ளிவாசலின் அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றித் தந்தமைக்காக அமைச்சரின் பணிகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், அமைச்சரின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னரே குறித்த பள்ளிவாசல் நிர்மாணத்திற்காக நிதியினை வழங்கியமையை இந்நிகழ்வில் சுட்டிக்காட்டி அலி ஸாஹிர் மௌலானா அரசியலுக்கு அப்பால் நின்று எப்போதும் கல்குடாவிற்காக தன்னால் ஆன பங்களிப்பினை நிறைவாக செய்து வரும் ஒருவர் என்பதை பல நிகழ்வுகளை பட்டியலிட்டு பள்ளிவாசல் தலைவரால் இங்கு ஞாபகப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வழி காட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இராஜாங்க அமைச்சர்களான அலி ஸாஹிர் மௌலானா, பைஸல் காசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி பணிகள் கல்குடா பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மேலும் பல அபிவிருத்திகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment