11 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபயவின் பெயரை கூற மாட்டார் என்று சூரியன், சந்திரனைப் போன்று நம்புகிறேன் என்று விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (30) வெல்லமங்கர பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய மீன்பிடி துறைமுகம் சம்பந்தமாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் அவரது பதவிக்காலத்திற்கு முன்பே போவதாக இருந்தால் அவர் முடிவெடுக்க வேண்டிய விடயம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதா? இல்லையா? என்பதே.
அவ்வாறு இல்லை எனின் அவரது பதவிக்காலம் முடிவடைந்தால் தேர்தல்கள் ஆணையாளர் தேர்தலை கெசட் செய்த பின்னர் எமது வேட்பாளரை அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வரலாற்றில் ஐ.தே.க. அதிக தேர்தல்களுக்கு முகங்கொடுத்த, அதிக காலம் நாட்டை ஆண்ட கட்சியாகும். தேர்தல்கள் ஆணையாளர் கூறியது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவது எனின், செப்டம்பருக்கு முதல் வைக்க வேண்டும். இல்லாவிடின் அது அசாத்தியமாகும்.
ஏனெனில் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலையும் வைக்க வேண்டும். எனவே ஜனாதிபதித் தேர்தலையே முதலில் வைக்க வேண்டி வரும் என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்.
கோத்தாபய அபேட்சகராக நிறுத்தப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் அதற்கு பயப்படவில்லை. அவர் ஆட்சியுடன் இருக்கும் போதே நாங்கள் இத் தேர்தலை சந்தித்திருக்கிறோம். ஆனால் அவரது குடும்பத்திலேயே இடமொன்று இல்லை. திரு.மஹிந்த அவர்களோ அல்லது நாமலோ இதுவரை கோத்தாபயவின் பெயரை கூறவில்லை என்று அவர் பதிலளித்தார்.
ரிஹ்மி ஹக்கீம்
No comments:
Post a Comment